நேற்றைய தினம் குருணாகல் மாவட்டத்தில் 33பேருக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 212 பேரில் 33 பேர் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 32 பேர், கம்பஹா மாவட்டத்தில் 31 பேர் கொழு ம்பு மாவட்டத்தில் 23 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேர், புத்தளம் மாவட்டத்தில் 09 பேர், மற்றும் கண்டி மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 03 பேர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 45 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

Be the first to comment

Leave a Reply