சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் போலிசெய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நடவடிக்கைகள் – சரத்வீரசேகர தெரிவிப்பு

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் போலிசெய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துசுதந்திரத்தை முடக்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய சட்டங்களில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் அரசமைபில் உள்ள அடிப்படை சுதந்திரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் கருத்துசுதந்திரம் ஜனநாயக நாடுகளில் தாரளவாதமயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் இதேநிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கருத்துசுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் சூழலிற்கு எதிரான நடவடிக்கைகளைஎடுக்கின்றது போன்ற போலி செய்திகள் சமூகஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன எனவும்தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் இன்னமும் நிருபிக்கப்படவில்லைஅரசாங்கம் சூழலை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைளை எடுத்துள்ளது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply