குறைந்த வருமானமுடைய நோன்பாளிகளுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் ரமழான் நோன்பாளிகளுக்கும் குறைந்த வருமான முடையவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்
கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதனைப் பெற்றுக்கொள்வதற்கு இறுதித் திகதி இல்லை எனவும் அவர் அவர் குறிப் பிட்டார்.
சமுர்த்தி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கிராம சேவையாளர் பிரிவுகள் மட்டத்தில் இனங்காணப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தை பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமையை
ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும்
இணைந்து அமுல்படுத்துகின்றன.

சமுர்த்திப் பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவைப் பெறுபவர்கள், 100 வயதை எட்டியுள்ள வயோதிபர்களுக்கான கொடுப்பனவைப் பெறும் குடும்பங்களுக்காக இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

புத்தாண்டுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்க
முயற்சிக்கப்பட்ட போதிலும் முடியாமல் போயுள்ளது. இதனால் பணம் கிடைக்கா
தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் உள்ள சமுர்த்திப் பயனாளர்கள் 18 லட்சம் பேருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதியானவர்கள் இன்று வியாழக்
கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

Be the first to comment

Leave a Reply