அனுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய இருவர் உயிரிழப்பு

அனுராதபுரம் – படிகாரமடுவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் இவர்கள் சட்டவிரோத மதுபானம் அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மூவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply