புத்தாண்டு தினத்தன்று பறிபோன குழந்தையின் உயிர்

யாழ். மட்டுவில் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவனொருவன் இயக்கியதில், அதில் மோதுண்டு பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதான பெண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

10 வயதான சிறுவன், வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இயக்கியுள்ளார்.

இதன்போது, வேகமாக இயங்கிய மோட்டார் சைக்கிள் முன்னால் நின்ற குழந்தை மீது மோதியுள்ளது.

இன்று (14) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply