திருகோணமலையின் பல பகுதிகளில் தடைப்பட்ட நீர் விநியோகம்

திருகோணமலையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம், சுரங்கள், இத்திவெவ மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானை பிரதான நீர்க்குழாயில் இடம்பெற்ற வெடிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

வெடிப்பு புனரமைக்கப்பட்ட போதிலும், மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனூடாக பெருமளவு நீர் வௌியேறுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தோப்பூர் பிரிவில் கடந்த வாரம் முதல் வரையறைகளுடன் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இரண்டு நாட்கள் குடிநீர் வழங்கப்படுவதுடன், அடுத்த இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகிக்கப்பட மாட்டாது என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையான குடிநீர் விநியோகம் இன்மையால், சிரமத்தை எதிர்நோக்குவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply