எடுத்த முடிவில் மாற்றமில்லை! மைத்திரியின் அரசியல் தாயகத்தில் மேதினப் பேரணி

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மே தினத்தை தனியாக நடத்த எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த இணக்கப்பாட்டுக்கு வர இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலன்நறுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தாயகம். இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான கட்சி என்ற வகையில், பொலன்நறுவையில் மே தின கூட்டத்தை நடத்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply