இவ்வாண்டில் இடம்பெறவுள்ள பேரழிவுகள் – பஞ்சாங்கத்தில் வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்கள்

 இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். அத்துடன் கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், இலங்கை கச்ச தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும். அத்துடன் புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வரும். இது உலகத்தையே ஆட்டிப் படைக்கும்.

இவ்வாறு தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகம் இராமேஸ்வரம் கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாகத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு,

இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா ஆகிய நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து ஏற்படும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை, ஏற்றம், இறக்கத்தை சந்திக்கும்.

உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பணம் கையிருப்பு என்பது குறைந்து எல்லாவற்றிலும் ஒன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும். புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வரும். இது உலகத்தையே ஆட்டிப் படைக்கும். உலகம் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். இந்த புதிய வைரஸை மூலிகை மருத்துவங்களால் மட்டுமே அழிக்க முடியும்.

தேனி, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக் கூடும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும்.

அத்துடன் கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், இலங்கை கச்சதீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும்  என அந்த பஞ்சாங்கத்தில் முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Be the first to comment

Leave a Reply