இலங்கையில் 104 நாட்களில் 400 கொரோனா மரணங்கள்!!

2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலப பகுதி வரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 400 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.நேற்றைய தினம் வரை இலங்கையில் கொரோனா தொற்றால் மொத்தமாக 604 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக காணப்பட்டது.எவ்வாறாயினும் இந்தாண்டின் 104 தினங்களில் 400 பேர் வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர். இதனடிப்படையில், இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் தினமும் சுமார் 4 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply