பிரதமரைச் சந்தித்த ஆளும் கட்சி பின்வரிசை உறுப்பினர்கள்!

ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அங்கு வருகை தந்திருந்தவர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் தமது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply