புத்தாண்டு தினத்தில் மின் தடையா? அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என அமைச்சின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளது.

இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

20% நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கிட்டத்தட்ட 40% லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூலமாகவும் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்று அவர் தெரிவித்து்ளளார். 

Be the first to comment

Leave a Reply