சந்தேகநபர் வழங்கிய தகவல்! 100கிலோ ஐஸ்போதை மீட்பு – 5பேர் கைது

சபுகஸ்கந்த – ரத்கஹவத்தை பிரதேசத்தில் 100 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரதிவித்துள்ளார்.

99 பெக்கெட்டுக்களில் பொதி செய்யப்பட்ட நிலையில் குறித்த ஐஸ் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது. ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹேரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply