குளத்துக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி!

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கூமாங்குளம் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டினை அண்மித்த சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குளக்கட்டினிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply