அரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை

ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடாத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் எதிர்வரும் 19ம் திகதி கூட்டமொன்று நடாத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் உருவாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும், ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன குறித்து தீர்மானம் எடுக்கும் போது ஆளும் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply