அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது

தெற்கு அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இவர்கள் நால்வரும் கண்டி – அக்குரணை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுக்கிடைப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை, விதிமுறைகளை மீறி காரில் பயணித்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி நேற்று (12) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த காரில் பயணித்த ஏனைய நால்வரும் அதிவேக வீதி பாதுகாப்பு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகன சட்டங்களை மீறியமை, வீதி ஒழுங்கினை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply