வவுனியாவில் அதிகாலை முதல் நிலவிய அசாதாரண நிலை!

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இன்று அதிகாலையிலிருந்து வவுனியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது.

இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply