யாழில் திருடர்களால் வயோதிபர் கொலை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலை கிழக்கில் ஆயுதங்களுடன் சென்ற திருடர்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் திருடுவதற்காக வந்தவர்களால் கழுத்து நெரிக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (12) அதிகாலை 02 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மீசாலை கிழக்கைச் சேர்ந்த 80 வயதான முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply