பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய தகவல்

புதுவருட பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழங்கலாம் என்றும் அது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கின்றது.

அவ்வாறான போலி நாணயத்தாள்கள் எவரது கையிலாவது கிடைத்தால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

1000 ரூபா போலி நாணயத் தாளை தம்வசம் வைத்திருந்த 28 வயது நபரொருவர் பனாகொட பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 5000 ரூபாய் தொடர்பபிலும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply