பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர்- புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா பரவல் ஆபத்து – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதன் காரணமாக புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளப்போகின்றனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்வகுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் இலங்கையில் அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply