நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளது.

01 . புத்தளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் புத்தளம் மா வட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து மஹரகம அபே க்ஷா மற்றும் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புற்று நோய், இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

  1. பத்தேகம பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிம்புர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply