நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை யோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ,மத்திய,மேல்,ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற் காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்று வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு, தாண்டிக் குளம் மற்றும் பெரியகரைச்சி வெவ ஆகியபிரதேசங் களுக்கு மேலாக நண்பகல் 12.11அளவில்சூரியன்உச்சம்கொடுக்கவுள்ளது.

Be the first to comment

Leave a Reply