கோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் எந்தவிதத்திலும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

அத்துடன், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

சந்தையில் தோலுடனான கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை 430 ரூபா என அவர் குறிப்பிட்டார்.

அதே கோழி இறைச்சி சதொசவில் 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுமாக இருந்தால், 1998 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply