கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- மைத்திரி தரப்பு எடுத்துள்ள தனிவழி

பொதுஜனபெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடையே தற்போது விரிசல்கள் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே தினத்தை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாஸ தெரிவித்தார்.

இது குறித்த இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் மே தினம் அனுஸ்டிக்கப்படும் என அவர் கூறினார்.

ஆளும் அரசாங்கத்தில் பிரதான கூட்டணி கட்சியாக உள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இந்த தனி வழி பயணம் பொதுஜன பெரமுன கட்சிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply