கஜேந்திரகுமார் சொல்லும் விடயங்களிலேயே உண்மை உள்ளது சம்பந்தன் இயலாத அரசியல் வாதி

கஜேந்திரகுமார் சொல்லும் விடயங்களிலேயே உண்மை உள்ளது சம்பந்தன் இயலாத அரசியல் வாதி

🔥

 இரா.சம்மந்தன் முதுமையால் இயலாத நிலையில் உள்ளார்.

கஜேந்திரகுமார் சொல்லும் விடயங்களிலேயே உண்மை உள்ளது

சிறிதரனின் மனச்சாட்சி பேசுகின்றது.

இன்றைய நேர்காணலில் சிறிதரன் கொட்டித்தீர்த்தவை .

👉

ஐ.நா. தீர்மானங்களில் சர்வதேச விசாரணை உள்ளதென நாம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை. அதில் நாம் ஏமாற்றப்பட்டு இலங்கை அரசுகளே வெற்றியடைகின்றன.

👉

அண்மையில் மக்கள் சமர வீர ஒரு கருத்தை சொல்லியிருந்தார் காணாமல் போனோர் அலுவலகத்தை எமது காலத்தில் கொண்டு வந்தது ஐ.நா. பிரேரணையின் இருந்து தப்பிக்கவே. அதில் நாம் வெற்றியடைந்தோம்.

👉

2015 தீர்மானத்தில் சர்வதேச விசாரணை உள்ளது. சர்வதேச விசாரணை நடக்கப் போகின்றது என்றோம். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டோம்

👉

தற்போதய தீர்மானத்தின் படி தகவல்களை சேகரிக்க ஒரு தொகைப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பணம் குறுகிய காலத்திற்கே போதுமானது. இந்த தகவல்கள் எப்படி சேகரிக்கப்பட போகின்றது அது எவ்வளவு நம்பகமானது என்ற கேள்வியும் சந்தேகமும் நமக்கு உண்டு

👉

தற்போதய தீர்மானம் பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்பவற்றில் உண்மை உண்டு . இந்த தீர்மானங்கள் மூலம் நாம் ஏமாற்றப்படுகின்றோம்.

👉

சர்வதேச விசாரணை நடந்துவிட்டது எனக்கூறுகின்றனர் . அது எப்போது நடந்தது? யார் நடத்தியது ? என்பது பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியவில்லை.

👉

இது ஒருவர் இருவர் கையாளும் விடயமல்ல என்பதனை சம்பந்தர் ஐயா புரிந்து கொள்ள வேண்டும். இது பலரால் கையாளப்பட வேண்டிய விடயம். நாம் கூடியிருந்து கதைக்க வேண்டும் அதனை தலைவர் வழிநடத்த வேண்டும். ஆனால் அவர் முதுமையால் இயலாத நிலையில் உள்ளார்.

👉

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் அறிவிக்கும் விடயங்கள். கட்சி தீர்மானங்கள் அல்ல கூட்டமைப்பிற்குள் கூடி அப்படி எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. பேச்சாளர் வாயக்கு வந்ததை சொல்லி விடுவார்

👉

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் பொருமி கொண்டு உள்ளனர்.

என் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சொல்பவை சில கசப்பாக இருந்தாலும் காலப்போக்கில் அவை உண்மை என்பதனை உணர முடிகின்றது.

46/1 தீர்மானம் போதிய வலுவுள்ளதாக இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்த்த போது ,அவர் அரச கைக்கூலி அதனாலேயே அரசுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கின்றார் எனற கருத்துளை உருவாக்கி பரப்பியோர் , அதனை நம்பியோர் உள்ளிட்ட அனைவரின் கவனத்திற்கும்

Be the first to comment

Leave a Reply