IPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்

IPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது.

14 ஆவது IPL தொடரின் முதல் போட்டி இன்று சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30-க்கு இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியில் 5 முறை சாம்பியனான ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான கடந்த IPL போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 03 போட்டிகளில் வெற்றி பெற்றது.

ரோயல் செலஞ்சர்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற, ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷம், குருனல் பாண்ட்யா, நாதன் கோல்டர்-நிலே அல்லது ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் உள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், மொஹம்மட் அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் IPL கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை சென்னை, பெங்களூர், மும்பை, அஹமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

Be the first to comment

Leave a Reply