98 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

98 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடவுச்சீட்டுக்கு உரிமையானவர்களைச் சட்டவிரோதமாக அவுஸ் திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் குறித்த நபர்கள் முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply