ரயில்வே தொழிற்சங்கத்தினரின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே தொழிற்சங்கத்தினர் திடீரென ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, பணிப்பகிஷ்கரிப்பை கைவிட அவர்கள் தீர்மானித்ததாக போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

ரயில்வே பொது முகாமையாளரை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 03 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply