பேராதனைப் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட முகக் கவசம் இன்று முதல் விற்பனை நிலையங்களில் – பந்துல

பேராதனைப் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட முகக் கவசம் இன்று முதல் விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள வைரஸ்களை அழிக்கக் கூடிய புதிய முகக் கவசம் இன்று முதல் விற்பனை நிலை யங்களில் பெற்றுக்கொள்ளலாம் என பந்துல தெரிவித்தார்.

நாடு என்ற வகையில் நாங்கள் பெருமை கொள்ளக் கூடிய வகையில் உலக முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பேரா தனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு மிக நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் காமினி ராஜபக்ஷ் தலைமையில் முகக்கவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பயன்பாட்டில் உள்ள சகல முகக்கவசங்களையும் விட உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆய்வுகளை நடத்திய பேராத பல்க லைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட பேரா சிரியர் காமினி ராஜபக்ஷ் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகக்கவத்தை சதோச விற்பனை நிலையங்களில் 200 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இந்த முகக்கவசத்தை கழுவித் தொடர்ந் தும் 25 தடவைகள் பயன்படுத்த முடியும் என பந்துல தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply