புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஆரம்பமாகிறது விசேட போக்குவரத்து சேவை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பஸ் மற்றும் புகையிரதங்கள் சேவையில் இன்று முதல் ஈடுப்படுத்தியிருப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன் இன்று முதல் 21 புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப் படும் அத்தோடு மேலதிகமாக 58 புகையிரதங்கள் பயண சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

Be the first to comment

Leave a Reply