பலசரக்கு கூட்டுத்தாபனத்தினூடாக மிளகு கொள்வனவு

பலசரக்கு கூட்டுத்தாபனத்தினூடாக மிளகு கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சிறு ஏற்றுமதி விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ மிளகை 800 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர குறிப்பிட்டார்.

மீமுரே, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிளகு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

1,50,000 கிலோ மிளகு இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்தினூடாக கொள்வனவு செய்யப்படும் மிளகை நிவாரண விலையில் மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply