பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டம்

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் வீதி விபத்துகளால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதில் 7 பேர் முன்னைய வீதி விபத்துகளால் பலத்த காயமுற்று அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதில் பாதசாரிகள் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் நேற்றை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில் , தற்போது வீதி விபத்துக்களானது அதிகரித்து வரும் நிலையில் , பொது மக்கள் பண்டிகைக் காலத்தில் அவதானமாக இருக்க வேண்டும்.

இலங்கை பொலிஸ் திணைக்களமானது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீதி விபத்துகள் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளது. இவ்வேலைத்திட்டமானது நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .

Be the first to comment

Leave a Reply