நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 128 பேருக்கு கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 343 பேரில் 128 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 68 பேர், கம்பஹா மாவட்டத்தில் 39 பேர், இரத் தினபுரி மாவட்டத்தில் 27 பேர், குருணாகல் மாவட்டத்தில் 09 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 08 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 07 பேர், களுத்துறை, காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 03 பேர், மாத் தறை மாவட்டத்தில் 02 பேர், கண்டி, அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 34 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply