நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது.

01 . தெஹிவலை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு , இரத்தம் விஷமானமையால் ஏற் பட்ட அதிர்ச்சி, உயர் இரத்த அழுத்தம் , கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.

  1. கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா , சிறுநீரக நோய், இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நீரிழிவு நோய் காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply