நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை யோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்ட லவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற் காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்று கிரிந்தேகம, பக்குனவல, பாதெனிய, எலகொமுவ, யொதகனாவ, பளுகெக்குளுகட மற்றும் குமணாறு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Be the first to comment

Leave a Reply