தென்னை மரங்களை வெட்ட தடை விதிக்கும் வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும்

தென்னை மரங்களை வெட்டத் தடை விதிக்கும் வர்த்தமானி அடுத்த வாரம் வெளியிடப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சிலாபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சின் செயலாளரான ரவீந்திர ஹேவாவிதாரன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தென்னை மரங்களை வெட்டுவது தொடர்பாக தீவிர அக்கறை செலுத்தும் வகையிலேயே இவ்வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகவும் இந்தத் தீர்மானத்துக்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்னை மரங்களை வெட்ட விஷேட அனுமதி பெற வேண்டும் எனவும் ஹேவாவித்தாரண கூறினார்.

Be the first to comment

Leave a Reply