தென்னிலங்கையில் பல கொலைகளைச் செய்த “தங்கல்ல சுத்தா” சிக்கினார்

பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான லொகுகே லசந்த பிரதீப் என்ற தங்கல்ல சுத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு முன்னெடுத்த விசேட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணையில் வசிக்கும் 39 வயதானகுறித்த சந்தேகநபர் 2006 மற்றும் 2007 காலப்பகுதியில் மாத்தறையில் பல நபர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த நபருக்கு தங்குமிடம் வழங்கிய சந்தேகத்தின் பேரில் நேற்று மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply