தடம்புரண்டது ருஹுனு குமாரி

மாத்தறையில் இருந்து கொழும்பு – மரதானை பகுதிக்கு வந்த ருஹுனு குமாரி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை மாத்தறையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய ரயில் காலி அருகே தடம் புரண்டுள்ளது.

காலிக்கு அருகில் தடம் புரண்ட ரயில், சற்று நேரத்திலேயே மீண்டும் சில மீட்டர் முன்னால் ஓடி காலி ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்போது ரயிலை மீண்டும் இயக்க முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர் என்று காலி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply