மத்தள விமான நிலையத்தின் மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து 2020 நவம்பர் மாதம் வரை 445,319,656 ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் 10,206 விமானங்கள் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில் 58,651 பயணிகள் வந்துள்ளனர், மேலும் விமான நிலையம் திறக்கப்பட்ட திகதியிலிருந்து 2020 நவம்பர் வரை 73,513 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகில் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், முதலீட்டாளருடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

“இந்த முன்னேற்றங்கள் விமான நிலையத்தை பொருளாதார ரீதியாக லாபகரமாக்கும்” என்று அமைச்சர் கூறினார்.

சீனாவிலிருந்து 190 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே கடன் வாங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் விமான நிலையத்தை நிர்மாணிக்க 247 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply