பல மாதங்களுக்குப் பிறகு மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம்

பல மாதங்களுக்கு பின்னர் அவுஸ்ரேலியா மெல்போன் நகரில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யு.எல் – 604 என்ற விமானம் அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த 11 பணிகள் பஸ் மூலம் 14 நாட்கள் தனிமைப் படுத்தல் நடவடிக்கைக்காகப் பாதுகாப்புடன் ஹோட்டல்களுக்கு அழைத் துச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவலை விடுத்துள்ளது.
அத்தோடு, சிங்கப்பூர் , தோஹா மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் வரும் விமானம் மூலமாக இன்றைய தினம் மொத்தம் 106 பயணிகள் வருவார்கள் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply