நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

அடுத்த சில நாட்களில் நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் மாலை வேலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்உயர்வாகக் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று(08ஆம் திகதி) போலவத்தை, வேதெனிய, வட்டாரம, அம்பகமுவ, திகனை, மஹாவல, கல்கமுவ, அம்பாறை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Be the first to comment

Leave a Reply