திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கைது

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சூலா பத்மேந்திரா ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின் இருவரும் கைது செய்யப்பட்டதை கறுவாத்தோட்ட பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

கடந்த சனிக்கிழமை(5) நடைபெற்ற திருமதி உலக அழகிகள் 2021 போட்டியில் வெற்றிபெற்ற புஸ்பிகா சில்வாவுக்கு ஏற்படுத்திய காயங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்போட்டியைத் தொடர்ந்து குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் புஸ்பிகா தனது முறைப்பாட்டை பதிவு செய்ததாகவும் இது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply