தங்கொட்டுவ தேங்காய் எண்ணெயில் புற்று நோய் இருப்பது உறுதி

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் சிக்கிய தேங்காய் எண்ணெயில் புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ பகுதியில் பொலிஸ் அதிகாரிகளால் கைப்பற்றிய இரு பவுசர்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெயில் அப்லடொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் இருப்பது இலங்கை தர நிர்ணய சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் குறித்த பவுசர்கள் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இலங்கை சுங்கம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குறித்த மாதிரிகள் இலங்கை தர நிர்ணய சபைக்கும், அரச இரசாயன பகுப்பாய்வுக்கு மற்றும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த மாதிரிகள் இலங்கை தர நிர்ணய சபையால் பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வுக்கு மற்றும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளதாக இலங்கைச் சுங்கம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply