சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தீவிரவாதம்! இருவர் கைது

ஒலுவில் பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்விப் பொது சாதாரண தர தேர்வுக்குப் பிறகு மாணவர்களுக்கு அடிப்படைவாத மற்றும் தீவிரவாத சொற்பொழிவுகளை வழங்கியமைக்காக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 39 வயதுடையவர்கள் மற்றும் ஒலுவில் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இலங்கை மாணவர்களை வெளிநாட்டு தீவிரவாத பயங்கரவாத குழுக்களுக்கு உறுப்பினர்களாக நியமிக்க செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply