இலங்கையில் அதி உயர் ஜனாதிபதி விருதைப் பெறும் தமிழர்

ஹற்றன், ஹைலன்ட்ஸ் கல்லூரி மற்றும் புளியாவத்தை தமிழ் வித்தியாலயம் என்பனவற்றின் பழைய மாணவரான கலாநிதி நவரட்ணராஜா விஞ்ஞானத்துறையில் அதி உயர் ஜனாதிபதி விருது வென்றுள்ளார்..

விஞ்ஞான ஆய்வுகளுக்கான விசேட ஜனாதிபதி விருது கலாநிதி நவரட்ணராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி நவரட்ணராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.

இவர் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மாணவர் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில் அதி உயர் ஜனாதிபதி விருதைப் பெறும் தமிழர் என்ற வகையில் இவரது புகழ் எங்கும் பரவுகின்றது.

Be the first to comment

Leave a Reply