ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்? வெளிவந்தது பட்டியல்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி.

தொடர்ந்தும் 35 ஆவது ஆண்டாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தொடர்ந்தும் நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்கா, சீனாவை அடுத்து உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது.

அதாவது இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துவிட்டது.

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 3ஆவது நாடு இந்தியா என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு சீனாவின் தொழிலதிபர் ஜாக் மா ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இப்போது அவரை முந்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

Be the first to comment

Leave a Reply