வே கங்கையில் மாணிக்கக்கல் அகழ்விற்கு அனுமதி வழங்க தீர்மானம்

இரத்தினபுரி – வே கங்கையில் மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதி வழங்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், தேல பாலம் தொடக்கம் எரபத்தாவ வரையான பகுதியில் மாணிக்கக்கல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, வே கங்கையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுதாகவும் அதனால் கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய நடைமுறையின் கீழ், 53 துண்டு காணிகளில் மாணிக்கக்கல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply