ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9 தொடக்கம் 13, 14 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி யாழ்ப்பாணம், பதுளை, களுத்துறை தெற்கு, வெயாங்கொட, அனுராதபுரம், குருணாகல், பெலியத்த, மாத்தறை, மருதானை, காலி ஆகிய இடங்களுக்கான புகையிரத சேவை இந்தக் காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இக் காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துவோர் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply