மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர் மானித்துள்ளது.

அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாகத் தேர்தலை நடத்தும் நிலைப் பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப் பட்டுள் ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கு அமைய விருப்பு வாக்கு முறைமையை நீக்கவும் , 70 வீதம் தொகுதிவாரி முறைமை யினடிப்படையிலும் 30 வீதம் விகிதாச்சார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்ந் தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.

அதற்கமைய கடந்த 15 வருடங்களாக அவதானம் செலுத்தப்பட்ட விடயத் திற்கு ஏற்ப தொகுதிகளை எவ்வாறு நிர்ணயிப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டு வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்த ப்படும்.

அமைச்சரவையிலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாக நடத்தும் நிலைப் பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என ரம்புக்வெல்ல தெரிவித் துள்ளார்.

Be the first to comment

Leave a Reply