புத்தாண்டு சுபநேர பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சம்பிரதாய பூர்வமாக ஜனா திபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

புதுவருடப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட் டுதல், உணவு பரிமாறுதல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் தொழிலுக்காகப் புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செய லாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இரா ஜாங்க அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க, கலாச்சார அலுவல் கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Be the first to comment

Leave a Reply