பம்பலப்பிட்டியில் சூதாட்ட நிலையமொன்று சுற்றிவளைப்பு

பம்பலப்பிட்டி – லோரிஸ் வீதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சூதாட்ட நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த 05 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றிவளைக்கப்பட்ட சூதாட்ட நிலையத்திலிருந்து பத்து இலட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாவும் 2600 யுவானும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Be the first to comment

Leave a Reply